வாட்ஸ்அப்பில் குவியும் ஸ்பேம் மெசேஜ்கள்... பிளாக் செய்ய புதிய அம்சம் விரைவில் அறிமுகம்
தொந்தரவைக் கொடுக்கும் ஸ்பேம் கால்கள்: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், பல வகையான சைபர் மோசடிகள் ஒரு பக்கம் அதிகரித்துள்ள நிலையில், மற்றொரு பக்கம், முதலீடு செய்கிறீர்களா, இன்சுரன்ஸ் வாங்க விருப்பமா என்று கேட்டு வியாபார நோக்குடன் நமக்கும் வரும் ஸ்பேம் கால்களுக்கு பஞ்சமில்லை.
வாட்ஸ்அப் ஸ்பேம் செய்திகள்: தொலைபேசியில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, Whatsapp செயலிலும் அறிமுகம் இல்லாத தொலைபேசி எண்களில் இருந்து, ஸ்பேம் செய்திகள் நமக்கு தொந்தரவை கொடுக்கும். மேலும் இதன் மூலம் நாம் சைபர் மோசடிக்கும் ஆளாக நேரிடலாம்.
ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சம்: மெட்டா நிறுவனம் அவ்வப்போது, பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய உதவும் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: ஸ்பேம் மெசேஜ்களை தடுக்க உதவும் அம்சம் சோதனை கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. Whatsapp கணக்கின் தனி உரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்து இது உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மெமரி மற்றும் பிராசஸர் பாதிக்கும் அபாயம்: ஸ்பேம் மெசேஜ்கள், பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கும் அதே நேரத்தில், ஸ்மார்ட் போனின் மெமரி மற்றும் பிராசஸரையும் பாதிக்கும். இதனால், ஸ்மார்ட்போனில் செயல்திறன் பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.
இணைய டேட்டா பாதிப்பு: ஸ்பேம் மெசேஜ்கள் மூலம், நமது இணைய டேட்டாவும் தேவையில்லாமல் செலவழிந்து, குறைந்து விடும். தேவையற்ற மெசேஜ்களில் வரும், புகைப்படங்கள் அல்லது கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படும் போது, அதற்கு டேட்டா அதிகம் செலவாவது இதற்கு காரணம்.
பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் (Block unknown accounts messages) என்ற இந்த அம்சம் WhatsApp-ல் அறிமுகம் இல்லாத கணக்குகளிலிருந்து உங்களுக்கு வரும் செய்திகளை பிளாக் செய்யும். புதிய அம்சம் அறிமுகமான பின், அதற்கான செட்டிங்கை ஆன் செய்த பின்னர் ஸ்பேம் செய்திகளில் இருந்து விடுதலை பெறலாம்.
ஸ்பேம் கணக்குகள்: பிளாக் அன்நோன் மெஸ்ச்சேஜஸ் என்ற அம்சத்தை ஆக்டிவேட் செய்த பிறகு, அறிமுகம் இல்லாத கணக்கிலிருந்து, வியாபார நோக்கில் அனுப்படும் ஸ்பேம் கணக்குகளை கண்டறிந்து, WhatsApp தானாகவே பிளாக் செய்யும். ஸ்பேம் கணக்கை நீங்கள் தனியாக பிளாக் வேண்டியதில்லை.