ஜனவரி முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் whatsapp வேலை செய்யாது.. ஏன் தெரியுமா?

Fri, 18 Dec 2020-2:36 pm,

வாட்ஸ்அப் ஒவ்வொரு ஆண்டும் பழைய சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்தி வருகிறது. Android மற்றும் iOS இன் பழைய பதிப்புகளுடன் இயங்கும் ஸ்மார்ட்போன்களும் இதில் அடங்கும். இந்த முறையும், 2021 ஆம் ஆண்டில் சில ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் தற்போது ஆண்ட்ராய்டு 4.3 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில், அதேபோல் iOS 9 அதற்கு முந்தைய சில பதிப்புகளில் இயங்கி வருகிறது. இப்போது வெளியான புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகளில் வாட்ஸ்அப் 2021 முதல் வேலைச் செய்வதை நிறுத்திவிடும்.

அதாவது ஆண்ட்ராய்டு 4.3 அல்லது அதற்கும் பழைய பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகளிலும், iOS 9 அல்லது அதற்கும் குறைவான பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களிலும் இனி வாட்ஸ்அப் ஆதரவு இருக்காது. இது குறித்து வாட்ஸ்அப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில், ஆண்ட்ராய்டு பதிப்பு 2.3.7 மற்றும் அதற்கு பழைய மற்றும் iOS 8 மற்றும் அதற்கு பழைய தொலைபேசிகளுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்திக்கொண்டது.2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் வாட்ஸ்அப் இதையே செய்யக்கூடும். 

ஆண்ட்ராய்டு 4.3 மிகவும் பழமையானது, இது 2012 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது. ஆப்பிள் iOS 9 கடந்த 2015 இல் வெளியிடப்பட்டது. சமீபத்திய OS பதிப்புகள் Android 11 மற்றும் iOS 14. இந்த பழைய Android மற்றும் iOS பதிப்புகளில் உள்ள பயனர் குழு பெரும்பாலும் மிகவும் குறைவாகவே இருக்கும், ஆனால் அதுவும் பயனர் எண்ணிக்கையை பாதிக்கும். 

இந்த ஆண்ட்ராய்டு சாதனங்கள் மற்றும் ஐபோன்களுக்கான ஆதரவை நிறுத்துமா என்று வாட்ஸ்அப் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் இன்னும் Android 4.3 அல்லது iOS 9 இல் இயங்கும் பழைய தொலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை இப்போதே சரிபார்த்துக்கொள்ளுங்கள். 

Settings > General > About எனும் அமைப்பில் மென்பொருள் பதிப்பைப் சரிபார்ப்பதன் மூலம் இதை தெரிந்துக்கொள்ளலாம். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link