7thCPC: ஏழாவது சம்பள கமிஷன் அகவிலைப்படி ஊழியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா?
பல மாநில அரசுகள் (மத்திய பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம்) அண்மையில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தின
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி குறித்து மத்தியஅரசு விரைவில் முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
பண்டிகைக்காலமான தற்போது, பொதுமக்கள், தீபாவளி போனஸ், சம்பள உயர்வு என பல எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்
அகவிலைப்படி உயர்வு என்பது 3 சதவீதம் இருக்கலாம் என்றும், மொத்த அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக உயர்த்தலாம் எனவும் கணிப்புகள் கணிக்கின்றன
அகவிலைப்படி உயர்வு என்பது தற்போது அறிவிக்கப்பட்டாலும், அது ஜூலை 1, 2023 முதல் அமல்படுத்தப்படும். அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தில், இந்த உயர்வு சேர்க்கப்படும் என்பதோடு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத் தொகையும் கிடைக்கும்
ஏழாவது சம்பளக் கமிஷனில் 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்
எனவே, பண்டிகைக் காலத்தை கோலாகலமாக கொண்டாட, அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை எதிர்ப்பார்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்ல, வணிகத்துறையும் காத்துக் கொண்டிருக்கிறது