சமையலுக்கு எந்த எண்ணெய் சிறந்தது? எப்படி பயன்படுத்தலாம்?
எண்ணெய் பொருட்கள் அதிகம் சாப்பிட்டால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் அதுவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களை கலந்து சமைத்த உணவை சாப்பிடும்போது இதய நோய் அபாயம் குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களை சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிடும்போது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்டராலின் அளவை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
rice bran oil மற்றும் safflower oil போன்ற எண்ணெய்களை கலந்து சமைக்கும்போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உடலுக்கு கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Oryzanol, Tocopherol மற்றும் Tocotrienol போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும், இது நாள்பட்ட நோய்களை தீர்ப்பதாகவும் கூறப்படுகிறது.