உங்களுக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
1-2 ஸ்பூன் வெந்தயத்தை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு பாதியானவுடன் அடுப்பை அணைத்து நீரை ஆற விடவும். இதை வடிகட்டி அந்த வெந்தய நீரை குடிக்கவும். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
வெள்ளைப்படுதல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தினமும் காலை வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். வாழைப்பழம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றும்.
இந்த பிரச்சனையை வீட்டில் இருந்தபடியே சரி செய்ய, மாதுளை சாப்பிடலாம். மாதுளை உடலின் உள் உறுப்புகளை குணப்படுத்த பெரிதும் உதவும் ஒரு பழமாகும். மேலும் மாதுளை இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து கஷாயம் போல் செய்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம். கொய்யா இலை கஷாயம் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு நெல்லிக்காய் (ஆம்லா) மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனையை சமாளிக்க நெல்லிக்காயை முழுவதுமாக சாப்பிடலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.