செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்த அந்த ஐந்து நடிகைகள் யார்?

Fri, 06 Sep 2024-5:45 pm,

நடிகை ப்ரியா பவானி சங்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2014 ஆம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி 2016 ஆம் ஆண்டு வரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு பிரபல டிவி சேனல் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். சீரியல்ல ஆரம்பித்த அவருடைய சினிமா பயணம் வெள்ளி திரையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். (புகைப்படம்: Priya Bhavanishankar / Social Media)

சன் டிவி, நியூஸ் 7 மற்றும் தந்தி டிவி போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்ததன் மூலமா சினிமா துறையில் என்ட்ரி ஆனார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு மதில், 2022 ஆம் ஆண்டு குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சினிமா மட்டுமில்லாமல் சீரியல், வெப் தொடர்களிலும் நடித்துள்ளார் (புகைப்படம்: Dhivya Duraisamy / Social Media)

பாலிமர் டிவி மற்றும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனிதா சம்பத், சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே பிரபலமானாங்க. இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர், நடிகர் சூர்யாவின் காப்பான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இவர் பிரபல தமிழ் எழுத்தாளர் ஆர்.சி. சம்பத் அவர்களுடைய மகள் ஆவார். (புகைப்படம்: Anitha Sampat / Social Media)

இலங்கையில் வசித்த இவர், 2015 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் தொலைக்காட்சியான சக்தி என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். தமிழகம் வந்த அவர், 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு பிரபலமானார். 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன்சிங் மற்றும் நடிகர் அர்ஜுன் அவர்கள் நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். (புகைப்படம்: Losliya / Social Media)

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய சரண்யா துராடி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். (புகைப்படம்: Sharanya Turadi / Social Media)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link