இளையராஜாவாக நடிக்க தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
)
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
)
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் இசை உலகின் ஜாம்பவானாக திகழ்பவர், இளையராஜா.
)
இளையராஜா இதுவரை 7000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார். 1000 படங்களுக்கும் மேல் இவர் இசையமைத்துள்ளார்.
தனுஷும் இளையராஜாவும் இதற்கு முன்னரே சில படங்களில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்துள்ளனர்.
விடுதலை படத்தில் இடம் பெற்றிருந்த “ஒன்னோட நடந்தா..” பாடலுக்கு இளையராஜா இசையமைக்க தனுஷ் பாடியிருந்தார்.
இளையராஜாவிடம் சினிமாவை தாண்டி நல்ல நட்பு பாராட்டும் நடிகர்களுள் ஒருவர், தனுஷ். இதனால் இவர் இளையராஜாவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இளையராஜாவின் இந்த வாழ்க்கை வரலாற்று படம் 2025ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.