சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்க
இந்திய அணியில் வாய்ப்புக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஒரு பிளேயர் என்றால் சஞ்சு சாம்சன் தான். அவர் சிறப்பாக ஆடினாலும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுப்பதில்லை.
மற்றவர்கள் ஒரு சில போட்டிகளில் ஆடாவிட்டாலும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கும் இந்திய அணி நிர்வாகம், அத்திபூத்தாற்போல் ஒரு வாய்ப்பு கொடுத்துவிட்டு அதில் சஞ்சு சாம்சன் சொதப்பினால் கூட வெளியே உட்கார வைத்துவிடுகிறது.
மற்ற இளம் பிளேயர்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புபோல் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கும் கிடைத்திருந்தால் நிச்சயம் அவருக்கான இடத்தை உறுதி செய்திருப்பார். ஆனால் அதனை தந்திரமாக பிசிசிஐ செய்யவே இல்லை.
இப்போதைய சூழலில் சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக முன்னிறுத்தப்படுபவர் ரிஷப் பந்த் தான். ஆனால் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் வைத்திருக்கும் ரெக்கார்டுகளும், சஞ்சு சாம்சன் வைத்திருக்கும் ரெக்கார்களையும் ஒருநாள் போட்டியில் பார்த்தால் யார் பெஸ்ட் பிளேயர் என்பது தெளிவாக தெரியும்.
சஞ்சு சாம்சன் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 சராசரியில் 510 ரன்கள் குவித்திருக்கிறார். ஆனால் ரிஷப் பந்த் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 871 ரன்களை 33 சராசரியில் எடுத்திருக்கிறார்.
இத்தனைக்கும் விக்கெட் கீப்பிங்க்கிலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக இருக்கக்கூடியவர் தான். ஆனால் சஞ்சு சாம்சனை ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் புறந்தள்ளிக் கொண்டே இருகிறது.
ரிஷப் பந்திடம் இருக்கும் ஒரே ஒரு கூடுதலான அம்சம் என்னவென்றால் அவர் இடது கை பேட்ஸ்மேன். சஞ்சு சாம்சன் வலது கை பேட்ஸ்மேன். வலது கை, இடது கை பேட்ஸ்மேன்களின் காம்போவுக்காக ரிஷப் பந்தை முன்னிறுத்தி இந்திய அணிக்குள் எடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
இது சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் வேண்டுமென்றே அவரை தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதிக்காமல் இருக்கின்றனர்.
ரிஷப் பந்துக்கு இருப்பது போல் சப்போர்ட் எல்லாம் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இல்லை. ரோகித் சர்மாவுக்கு பேவரைட் பிளேயர் ரிஷப் பந்த். அதனால் அவரது கேப்டன்சியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இப்போது ஒருநாள் போட்டிக்கு மட்டுமே ரோகித் கேப்டன் என்ற நிலையில், நிலைமை இப்போதாவது மாறுமா? என்றால் சஞ்சு சாம்சனுக்கான கதவு மட்டும் இன்னும் அடைத்தே இருக்கிறது. இதற்கு மேல் அவர் என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை.
புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் சஞ்சு சாம்சனுக்கு பேவரைட்டாக இருப்பதுபோல் தெரியவில்லை. அவரை வெளியே உட்கார வைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருப்பதாகவே தெரிகிறது.
அதனால் திறமை இருந்து அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கும் சஞ்சு சாம்சன், இன்னும் சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதையே இலக்காக கொண்டிருக்கிறார். அவருக்கான வாய்ப்பு அடுத்த ஆண்டிலாவது கிடைக்க அதிர்ஷ்டம் துணையிருக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.