Women`s Day Vs Men`s Day : பெண்கள் தினத்தை போல ஆண்கள் தினத்தை யாரும் கொண்டாடப்படாதது ஏன்?
மார்ச் 8ஆம் தேதியான இன்று, உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களையும், தனிப்பட்ட வாழ்வில் தனக்கு தெரிந்த பெண்களையும் ஆண்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடத்தின் மகளிர் தினத்தின் தீம், ஊதா நிறமாகும். அலுவலகங்கள், பொது இடங்கள், கல்லூரிகள் என பல இடங்களில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை பலர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினாலும், சிலருக்கு “ஏன் யாருமே ஆண்கள் தினத்தை இது போல கொண்டாடுவதில்லை?” என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இவர்களுக்கான தினம் கொண்டாடப்படுவதே பலருக்கு தெரிவதில்லை. அந்த நாள் என்று கொண்டாடப்படுகிறது? இதை நாம் பெரிதளவில் கண்டுகொள்ளாததற்கு காரணம் என்ன? இங்கு பார்ப்போம்.
மகளிர் தினத்தை போலவே ஆண்கள் தினமும் கொண்டாடப்படுகிறது. இதனை, நவம்பர் 19ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் நிறைய காரணங்கள் இருப்பது போல, ஆண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னாலும் சில காரணங்கள் இருக்கின்றன.
உலகளவில் ஆண்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அந்த பிரச்சனைகளாக பெற்றோர்களிடம் இருந்து தனிமைபடுத்தப்படுதல், பாலியல் வன்புனர்வு, வீடடற்ற தன்மை, தற்கொலை எண்ணங்கள், வன்முறை ஆகியவை கூறப்படுகின்றன.
மகளிர் தினத்தை போல ஆண்கள் தினத்தை கொண்டாடாதது ஏன்?
சமூக கட்டமைப்பின்படி, ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள்தான் அதிகளவில் ஒடுக்கப்படுகிறார்கள், சம உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். படிப்பு, வேலை, சமூகம், குடும்பம் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு இருக்கும் கட்டமைப்புகள், தடைகள் மட்டுமே ஏராளம். வாக்குரிமைக்காக போராடிய காலத்தில் இருந்து, இன்று அனைத்து இடங்களிலும் சம உரிமைகளுக்காக குரல் கொடுப்பது வரை, பெண்களின் போராட்ட குரல்கள் நிற்கவே இல்லை. ஆகையால், இதுவரை பெற்ற சுதந்திரத்தையும் கொண்டாடும் வகையிலும் இனி பெற இருக்கும் சுதந்திரத்தை வரவேற்கும் வகையிலும் மகளிர் தினத்தை கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை போல ஆண்கள் தினத்தை கொண்டாடாதது ஏன்?
சமூக கட்டமைப்புகளின் படி, ஆண்கள், பெண்களை போல பல அடக்குமுறைகளுக்கு ஆளக்கப்படாமல் சில உரிமைகளை கேட்காமலேயே பெற்றிருக்கின்றனர். வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்த்தால், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கும் பல சலுகைகள் கிடைப்பதில்லை. பெண்கள், தங்களது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் பாலியல் துன்புறுத்தல், சமூக நிலை ஆகியவற்றால் அமைதியாக்கப்படுகின்றனர். அதை உடைத்தெறிந்து இது குறித்து குரல் கொடுக்கும் வகையிலும், அவர்களின் கண்ணியத்தையும் கொண்டாடும் வகையிலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.