ஒயின் குடிப்பவரா நீங்கள்? இதை தெரிஞ்சுக்கோங்க!
திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயினில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்டுகள் செல்களில் ஏற்படும் சேதத்தை குறைக்கிறது மற்றும் பல நோய் தாக்குதலிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
ஒயினில் ஆன்டி இன்ப்ளமேட்டரி பண்புகள் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. சிவப்பு ஒயினில் ரெஸ்வெரோட்ரோல் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது, இது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை பாதுகாக்க உதவுகிறது.
ஒயினில் சில நன்மைகள் இருந்தாலும் அது ஒரு ஆல்கஹால், இதனை அதிகமாக குடித்தால் பக்கவாதம், உடல் பருமன், கல்லீரல் சம்மந்தமான பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
ஒரு ஆரோக்கியமான பெண் தினசரி 2 கப் அளவு மட்டுமே ஒயின் குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.