இந்த ராசிக்கார பெண்களுக்கு கோடீஸ்வர யோகம் நிச்சயம்!
ஜாதகத்தின்படி, எந்த ராசியாக இருந்தாலும் ஆண்களுக்கு ஒரு மாதிரியான பலன்களும், பெண்களுக்கு வேறு மாரியான பலன்களும் இருக்கும். அந்தவகையில், சில ராசிக்கார பெண்கள் இயல்பாகவே கோடீஸ்வர யோகத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கைராசி எப்போதும் வீட்டுக்கு செல்வத்தை நிச்சயம் கொண்டு வந்து சேர்க்கும். அப்படியான ராசிக்கார பெண்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமா? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் கிரகம் என்பதால் இந்த ராசிப் பெண்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் உள்ளது. அவர்கள் எங்கு சென்றாலும், செல்வத்தையும் பணத்தையும் ஈர்த்துவிடுவார்கள். இந்தவகை பெண்களை கண்டால் மாமியார்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மீனம்: மீனம் ராசி பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாகப் பிறந்தவர்கள். குருவின் செல்வாக்கு காரணமாக மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் அறிவு ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்கள் கணவர்களின் அதிர்ஷ்டத்தையும் மேம்படுத்துகிறார்கள். அதனால் இந்த ராசி பெண்கள், திருமணத்துக்குப் பிறகு கணவன் மற்றும் மாமியார்களிடமிருந்து நிறைய அன்பைப் பெறுகிறார்கள்.
கும்பம்: கும்ப ராசிக்கு அதிபதி சனி. சனியின் தாக்கத்தால் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், கனிவானவர்களாக இந்த ராசி பெண்கள் இருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு படி நிலையிலும் தன் கணவனுக்கு ஆதரவாக இருப்பார்கள். நியாயமானவர்கள். யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள். அதனால்தான் இவர்களுக்கு மாமியார் வீட்டில் பாசமும் அன்பும் அதிகம் கிடைக்கிறது.
கடகம்: கடக ராசி பெண்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு சந்திரன் அருள் பரிபூரணமாக இருக்கும். இதனால் அவர்கள் எப்போதும் ஸ்மார்ட்டாகவே செயல்படுவார்கள். மன உறுதி, பிரகாசம் எப்போது இவர்களை சுற்றியிருக்கும். குடும்பத்தில் அன்பையும் செல்வத்தையும் கொண்டு வருவார்கள். இவர்கள் மீது எல்லாம் மாமியார்கள் பரிசத்தை பொழிவார்கள்