புரட்டாசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு பவர் அதிகமா? காக்கும் பெருமாளை வணங்கும் சிறப்பு சனிக்கிழமைகள்!
சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவகிரகம். சனிக்கிழமை அவருக்கு உரிய நாள். எல்லா சனிக்கிழமைகளிலும் சனீஸ்வரரின் கோவிலில் கூட்டம் அலைமோதும்...
ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவகிரகமான சனீஸ்வரருக்கு உரிய நாளான சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் மட்டும் பெருமாளின் வழிபாட்டிற்குரியது
காக்கும் கடவுளை வழிபடும்போது, அவரின் அனுக்கிரகம் கிடைத்தால், சனீஸ்வரரின் தொல்லைகள் நீங்கிவிடும்
சனீஸ்வரர் தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவரவர் வினையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதில், சனியின் பிடியில் இருக்கும்போது தான் கஷ்டங்களை அனுபவிக்கும் காலம் வரும்
கர்மவினைகள் ஒருபுறம் என்றால், பக்தனுக்கு அனுகிரகம் செய்யும் பெருமாளின் கடைக்கண் பார்வை பட்டாலே, அனைத்து வினைகளும் அறுபடும் என்பதால், புரட்டாசி சனியில் பெருமாளை வணங்கினால் போதும்
புரட்டாசி சனியில், பெருமாளின் அனுக்க சேவகர் ஹனுமனை வழிபடலாம்
விக்னங்களை போக்கும் விக்ன விநாயகர் வழிபாடு பெருமாளின் கருணையை கொண்டு வந்து சேர்க்கும்
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது என்பது நமது மரபாக இருந்தாலும், தண்ணீரை தானமாகக் கொடுத்தால் நமது வினைகள் அகலும்
பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது