காதலால் இதயம் கனக்கிறதா? இதயத்தை காதலிக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
சால்மன், மத்தி உட்பட பல மீன்களில் அதிக அளவிலான ஒமேகா 3 அமிலம் உள்ளது, இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
அக்ரூட் பருப்புகள் எனப்படும் வால்நட்ஸ் அதிக நார்ச்சத்து, அதிக சத்து நிறைந்த உணவு ஆகும். இதில், தாமிரம், மாங்கனீசு, வைட்டமின் ஈ மற்றும் பிற முக்கிய கனிமங்களும், சத்துக்களும் உள்ளன
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எப்போதுமே இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து என நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆளி விதைகளில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பிற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. பெரும்பாலான எண்ணெய் தாவர விதைகளுடன் ஒப்பிடும்போது, ஆளி விதையில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.
ஒமேகா -3 உள்ள உணவை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு