கேஜிஎப் 3 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி! ஆனால் இயக்குனர் பிரசாந்த் நீல் இல்லை?
கேஜிஎஃப் 3 படத்தின் ஸ்கிரிப்ட் தயார் நிலையில் இருப்பதாக அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் உறுதிப்படுத்தினார். பிரசாந்த் நீல் தற்போது 'சலார்' படத்தின் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறார். இந்த மாதம் படம் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 'சலார்' உருவாகிறது.
இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 3 படம் நடக்கும் என்றும், ஆனால் நான் இயக்குனரா இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால் யாஷ் எப்போதும் அதில் ஒரு பகுதியாக இருப்பார் என்று கூறினார்.
எங்களிடம் ஏற்கனவே ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நாங்கள் ஸ்கிரிப்டை முடிவு செய்தோம் என்றும் கூறி உள்ளார்.
சலார் படத்திற்குப் பிறகு 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜூனியர் என்டிஆர் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்றும் கூறினார்.