Year ender 2020: இந்த ஆண்டில் உலகை உலுக்கிய பெரிய இயற்கை பேரழிவுகள்

Sat, 12 Dec 2020-8:51 pm,

அம்பான் சூறாவளி (Cyclone Amphan) 1999 ஆம் ஆண்டின் சூப்பர் சூறாவளிக்குப் பின்னர் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய சூறாவளி அம்பான் சூறாவளி (Cyclone Amphan).  இது, 2020 மே மாதம் மேற்கு வங்காளத்தை பேரழிவிற்கு உட்படுத்திய அம்பானின் தாக்கத்தால் மேற்கு வங்கத்தில் 86 பேர் பலியானார்கள். இந்த சூறாவளி பலரை வீடற்றவர்களாக மாற்றியது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், இணைய இணைப்பு மற்றும் பிற தகவல்தொடர்பு கருவிகளை சேதப்படுத்தியது அம்பான் புயல். ஒடிசாவில் சுமார் 45 லட்சம் மக்கள் மிகவும் கடுமையான சூறாவளி புயலால் பாதிக்கப்பட்டனர்.

துருக்கி பூகம்பம் (Turkey earthquake) துருக்கிய நகரமான இஸ்மீர் அருகே ஏஜியன் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 116 பேர் கொல்லப்பட்டனர், 1,035 பேர் காயமடைந்தனர். துருக்கியின் மூன்றாவது பெரிய நகரமான இஸ்மீர் (Izmir) மற்றும் பூகம்பத்தின் மையப்பகுதியின் தெற்கே அமைந்துள்ள கிரேக்க தீவான சமோஸில் பாதிப்புகள் அதிகமாக இருந்தன. நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவில் என அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்தது.  பிற ஏஜென்சிகள் அதை மிகக் குறைவானதாக பதிவு செய்தன. மேற்கு துருக்கி முழுவதும் இஸ்தான்புல் மற்றும் கிரேக்க தலைநகரான ஏதென்ஸிலும் இந்த நடுக்கம் உணரப்பட்டது. இஸ்மிரில், நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், இடிபாடுகளாக மாற்றின.  

கலிபோர்னியா காட்டுத்தீ (California Wildfires)   கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 2020 ஆம் ஆண்டில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர்களை (1.6 மில்லியன் ஹெக்டேர்) எரித்து சாம்பலாகிவிட்டன, இது எந்தவொரு ஆண்டையும் விட அதிகம், மிகப்பெரிய பரப்பளவு வனத்தை தீ சாம்பலாக்கிவிட்டதாக மாநில தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. வெப்பமயமாதல் மற்றும் மின்னல் தாக்குதல்களே காட்டுத் தீக்கு காரணம்.   வரலாறு காணாத அளவு அமெரிக்க அரசு இந்த ஆண்டு மிகப்பெரிய காட்டுத்தீக்களை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 31 பேர் இறந்துள்ளனர்.

அசாம் வெள்ளம் (Assam floods) ஜூலை மாதத்தில் அசாம் வெள்ளம், 1,981,801 பேரை பாதித்தது. 105 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 42,275 பேர் வெளியேற்றப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 236 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது. காசிரங்கா தேசிய பூங்காவில், 14 ஒரு கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட 137 க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தால் இறந்துவிட்டன.   

ஆஸ்திரேலியா காட்டுத்தீ (Australia fires) ஜனவரி 2020 இல் ஆஸ்திரேலியா பரவலான மற்றும் கடுமையான தீவிபத்துக்களை சந்தித்தது. இதனால் உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது, சுற்றுவட்டாரங்களில் புகைமண்டலாய் சுற்றிக் கொண்டது. கடந்த பருவத்தை பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் "பிளாக் சம்மர்" (Black Summer) என்று அழைத்தார், வழக்கத்திற்கு மாறாக நீடித்த மற்றும் தீவிரமான காட்டுத்தீ காரணமாக கிட்டத்தட்ட 12 மில்லியன் ஹெக்டேர் (30 மில்லியன் ஏக்கர்) சாம்பலானது, 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1 பில்லியன் விலங்குகள் பாதிக்கப்பட்டன. ஜனவரி 9 ம் தேதி ஏற்பட்ட தீ, தெற்கு ஆஸ்திரேலியாவின் கங்காரு தீவை (Kangaroo Island) அழித்துவிட்டது, 2020 அன்று, . ஜனவரி 4 ஆம் தேதியன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா பகுதிகளை புகை மேகமாக சூழ்ந்திருந்த்தை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டது.  அந்த புகை மண்டலமானது ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து டாஸ்மன் கடலில் பரவியது.

வெட்டுக்கிளிகள் (Locusts) ஜூன்-ஜூலை மாதங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் கண்டது இந்தியா, இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரிசி மற்றும் கோதுமையை உற்பத்தி செய்யும் ஒன்பது மாநிலங்களுக்கு பரவியது. இந்தியா பல தசாப்தங்களாக மோசமான பாலைவன வெட்டுக்கிளியை எதிர்த்துப் போராடி வந்துள்ளது. ராஜஸ்தானில் பயிர் இழப்புகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. வெட்டுக்கிளிகளைத் தடுக்க பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஒரு டஜன் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் பிரிட்டனில் இருந்து ஐந்து புதிய ஹெலிகாப்டர் பொருத்தப்பட்ட தெளிப்பு அமைப்புகளை நிறுவவும் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்ததாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

சூறாவளி வாம்கோ (Typhoon Vamco) 2020 நவம்பரில் பிலிப்பைன்ஸைத் தாக்கிய கொடிய சூறாவளியினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 67. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. பிரதான லூசன் தீவில் சூறாவளி வாம்கோவின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தலைநகர், மெட்ரோபாலிடன் மனிலா உட்பட ககாயன் பள்ளத்தாக்கு (Cagayan Valley) பகுதி வெள்ளத்தில் மூழ்கின.  

அமேசான் மழைக்காடுகள் தீ (Amazon rain forest fires) பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீ, செப்டம்பர் முதல் வாரத்தில் மோசமடைந்தது மற்றும் தீப்பிழம்புகளின் கோரதாண்டம் ஆகஸ்ட் மாதத்தில் 10 ஆண்டுகள் இல்லாத அளவில் இருந்தது. பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Inpe-வின் தரவுகளின்படி, பிரேசில் செப்டம்பர் முதல் ஏழு நாட்களில் அமேசான் மழைக்காடுகளின் ஒரு பகுதியில் 8,373 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. செப்டம்பர் 9 வரை ஏற்பட்ட பெரிய தீ விபத்துகளில் 27% வனப்பகுதிகளில் இருந்தன, அமேசானில் ஏற்பட்ட தீயை, ஓராண்டிற்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துகளுடன் ஒப்பிடும்போது ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 13% அதிகரித்துள்ளது. செப்டம்பரில், செயற்கைக்கோள்கள் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் 32,017 ஹாட்ஸ்பாட்களை பதிவு செய்தன.

மெக்சிகோ பூகம்பம் (Mexico earthquake) 2020 ஜூன் 23ஆம் தேதியன்று, மெக்ஸிகோவின் ஓக்ஸாக்கா (Oaxaca)அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, கட்டடங்கள் சேதமடைந்தன.  இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அகபுல்கோ-வில் (Acapulco) 0.68 மீட்டர் (2.2 அடி) அலைகள் மற்றும் சலினா குரூஸ்-இல் (Salina Cruz) 0.71 மீட்டர் (2.3 அடி) அலைகள் காணப்பட்டன. இந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 10. தென் மாநிலமான ஓக்ஸாக்காவில் உள்ள பிரபலமான ஹுவாதுல்கோ கடற்கரை ரிசார்ட்டைச் சுற்றியுள்ள பகுதி 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது, ஆனால் அதிர்வு மெக்ஸிகோ நகரத்திற்கு வெகு தொலைவில் உணர முடிந்தது, அங்கு உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் அதிர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் ஓடினர். தலைநகரில் சுமார் 30 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 2017 ஆம் ஆண்டு நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு பகுதியில், சிலர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ஜப்பான் வெள்ளம் (Japan floods) ஜப்பானின் தென்மேற்கு தீவான கியுஷு-வில் (Kyushu) பெய்த மழையால், நதிகள் கரையை கடந்து நகரத்திற்குள் புகுந்தன. மூன்று நாட்கள் தொடர்ந்த மழை வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது, அரை மில்லியனுக்கும் அதிகமான தீவுவாசிகள் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டன. மேற்கு ஜப்பானில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஜப்பானின் தேசிய ஊடகம் NHK தெரிவித்தது.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link