குழந்தைகளுக்கான சூப்பர் யோகாசனங்கள்! ஈசியாக செய்யலாம்..
உலகளவில் யோகா செய்பவர்கள் பல கோடி பேர் இருக்கின்றனர். இதன் அருமை தெரிந்தவர்கள், யோகாவை தினசரி செய்கின்றனர். இதனால் உடல் வலுவாவதுடன் ஃப்ளெக்சிபில் ஆகவும் இருக்கும். எடையையும் பாலன்ஸ் செய்யலாம்.
வீர பத்ராசனம் 1:
வீர பத்ராசனம் ஆசனத்தை நின்று கொண்டு செய்ய வேண்டும். இது, மார்பு, கழுத்து, வயிறு,, தோள்பட்டை ஆகியவற்றை வலுவாக்க உதவும். தொடை மற்றும் கணுக்காலையும் வலுவாக்கவும் இது உதவும்.
வீர பத்ராசனம் 2:
விரபத்ராசனம் முதுகு வலியை நீக்க செய்யப்படும் யோகாப்பயிற்சிகளுள் ஒன்றாகும். இது, இடுப்பு எலும்பை வலுவாக்க மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
வஜ்ராசனம்:
வஜ்ராசனம் யோகா பயிற்சியை உட்கார்ந்து கொண்டு செய்யலாம். குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் ஆசனங்களுள் இதுவும் ஒன்ரு. இது, நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, செரிமான கோளாறுகளையும் சரிசெய்யும்.
உஸ்த்ராசனம்:
உஸ்த்ராசன யோகாசனம் மனதை சாந்தப்படுத்தும் பயிற்சிகளுள் ஒன்றாகும். இது, பின்முதுகு வலியை நீக்கும் உடற்பயிற்சியாகும். நுரையீரலையும் இந்த உடற்பயிற்சி வலிமையாக்கும்.
சப்த வஜ்ராசனம்:
சப்த வஜ்ராசனம், உடலில் வாயுத்தொல்லையை நீக்க உதவும். செரிமான கோளாறை சரிசெய்ய இந்த ஆசனத்தை செய்யலாம். இது, உடல் தசைகளை வலுப்படுத்தவும் உதவும்.
தனுராசனம்:
தனுராசனம், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள செய்யப்படும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இதை தினசரி செய்வதால் முதுகுத்தண்டு வலிமையடையும்.
பத்தா பத்மாசனம்:
இந்த ஆசனத்தை செய்வதால், முட்டி மற்றும் தோள்பட்டைகள் வலுபெறும். கைகள் மற்றும் முதுகுப்பகுதியை வலுப்படுத்த இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.