PPF: மாதம் ரூ.12,500 முதலீட்டில்... ஒரு கோடியை பெறுவது எப்படி..!!
பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF சேமிப்பு திட்டத்தில், மாதம் ரூபாய் 12,500 சேமித்தால் எளிதில் கோடீஸ்வரர் ஆகலாம். 15 வருடங்களுக்கு தொடர்ந்து, தினம் ரூபாய் 416 என்ற அளவில் நீங்கள் முதலீடு செய்து வந்தால், கோடீவரனாகும் கனவு நிறைவேறும்.
மாதம் ரூபாய் 12,500 முதலீடு செய்து வந்தால், சுமார் 7.1% வருடாந்திர வட்டி என்ற அளவில், கூட்டு வட்டியின் பயனால், 15 ஆண்டுகளில் முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூபாய் 40.68 கிடைக்கும்.
PPF திட்டத்தில் 15 ஆண்டுகள் நீங்கள் செய்த முதலீடு ரூபாய் இரண்டு 22. 50 லட்சமாக இருக்கும். அதே சமயத்தில் வட்டி வருமானம் ரூ.18.18 லட்சம் என்ற அளவில் இருக்கும். கூட்டு வட்டியின் பயனால், வட்டி வருமானம் அதிகமாக இருக்கும்.
நீங்கள் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், 15 ஆண்டு கால முதலீட்டுக்கு பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு முறை இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாக இருக்கும்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு முதிர்வு தொகையாக ₹ 1.03 கோடி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூ.37.50 அளவில் இருக்கும். வட்டி வருமானமாக உங்களுக்கு கிடைக்கும் தொகை, ரூபாய் 65.58 லட்சம்.
கூட்டு வட்டியினால், வட்டி தொகை முதலீட்டை விட அதிகமாக இருக்கும். பிபிஎஃப் திட்டத்தின் கீழ், பணத்தை பன்மடங்காக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி விலக்கின் பலனையும் பெறலாம்.
வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ், வருமான வரி விலக்கு உண்டு. இந்தத் முதலீட்டு திட்டத்தில் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு கிடைக்கும்.
கூடுதலாக பிபிஎப் முதலீட்டில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. மக்கள் மத்தியில் சிறு சேமிப்பு திட்டங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் நிலையில், மத்திய அரசு நடத்தும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.