நிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்ட
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் இணையவழி பட்டா மாறுதல் சேவை மூலம் வீடுமனை வாங்குவோர் சொத்துக்களுக்கு பட்டா பெயர் மாற்றம் கூறி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிந்தும் அதிகாரிகள் இறுதி முடிவுக்காக மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருப்பதாக தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து ரெவென்யூ டிபார்ட்மென்ட் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இணையவழி பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இடங்களில் (NISD) இந்த வருஷம் 1.4.2024 முதல் 8.11.2024 வரை முழுக்க பெறப்பட்ட 16,41,019 மனுக்களில் 15,65,80 மனுக்கள் முடிவு செய்யப்பட்டது. இன்றைய நிலையில 75,934 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில 86 மனுக்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு மேல் இன்னும் நிலுவையில் உள்ளது. மீதி எல்லாமே கிளியர் செய்யப்பட்டு உள்ளது எனக் கூறியுள்ளனர்.
இணையவழி பட்டா மாறுதல் உட்பிரிவு இடங்களில் (ISD) இந்த வருஷம் 1.4.2024 முதல் 8.11.2024 வரை பெறப்பட்ட 14,02,160 மனுக்களில் 12,02,305 மனுக்கள் முடிவு செய்யப்பட்டது. இன்றைய நிலையில 1,99,855 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில 1907 மனுக்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு மேல் இன்னும் நிலுவையில் உள்ளது. மீதி எல்லாமே கிளியர் செய்யப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
இணையவழி பட்டா மாறுதல் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் அரசு முதன்மை செயலாளர், வருவாய் மற்றும் பேரிட மேலாண்மைத் துறை, நில நிர்வாக ஆணையர் மற்றும் இயக்குனர், நிலஅளவை மற்றும் நிலவரி திட்டம் ஆகியோரால் ஆகியோரால் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அந்த ஆய்வுக் கூட்டங்களில் பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத இனங்களை மனுக்கள் மீது 15 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது
இணையவழி பட்டா மாறுதல் உட்பிரிவு மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு முடிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இணையவழி பட்டா மாறுதலில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்தவும் பட்டா மாறுதல் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மனுதாரர் இணையவழி பட்டா மாறுதல் ஊரகம் மற்றும் நகர்ப்பு பொருள் பெறப்படும் உட்பிரிவு இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் மீது பட்டா கூறி விண்ணப்பம் செய்யப்படும் மனுக்கள் மீது ஃபர்ஸ்ட் இன் ஃபர்ஸ்ட் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படு.