திருமணத்திற்கு முன் சஹால் இந்த நடிகையை காதலித்தாரா...? யார் இந்த தனிஷ்கா கபூர்?
தனிஷ்கா கபூர் (Tanishka Kapoor) கன்னட நடிகை ஆவார். பிரபல நடிகரான உப்பேந்திராவின் 'உப்பி 2' திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார் இவர்.
1st ரேங்க் ராஜூ திரைப்படத்தின் மூலம் தனிஷ்கா கபூர் மக்கள் மனங்களில் இடம்பிடித்தார். அதன்பின் நடிப்பில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.
தனிஸ்கா கபூர் பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் (Yuzhvendra Chahal) உடன் காதல் உறவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக, சாஹல் - தனிஷ்கா கபூர் இடையே திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் எனவே எங்களது உறவு குறித்து ஆதாரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் யுஸ்வேந்திர சஹால் கேட்டுக்கொண்டார்.
இந்த வதந்திகள் குறித்து யுஸ்வேந்திர சஹால் ஊடகங்களிடம் விளக்கம் அளித்தாலும், இதுகுறித்து நடிகை தனிஷ்கா கபூர் தொடர்ந்து மௌனம் காத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma) தம்பதிக்கு கடந்த 2020ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில் தற்போது இவர்கள் பிரிந்துவிட்டதாகவும், விவாகரத்திற்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
நடிகை தனிஷ்கா கபூர் நீண்ட காலமாக பொது வெளிச்சம் இன்றி அனைத்திலும் இருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், சாஹல் - தனஸ்ரீ தம்பதியின் பிரிவிற்கு பிறகு மீண்டும் தனிஷ்கா கபூரின் பெயர் அடிபட தொடங்கியிருக்கிறது. விவாகரத்து தகவலை தொடர்ந்து சாஹல் - தனிஷ்கா கபூர் உறவு மீதான வதந்தி தற்போது விஸ்பரூபம் எடுத்துள்ளது. இதன்மூலம் நடிகை தனிஷ்கா மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் எனலாம்.