போபால் திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்த போட்டோகிராப்பர் எதிர்பாரா விதமாக துப்பாக்கி தோட்டா துளைத்து கொல்லப்பட்டார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சவுராஹ் மீனா(34) என்று அடையாளம் காணப்பட்ட இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். 


போபால் நடராஜ் சமத்துவ மையத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கையில், திருமண நிகழ்வில் துப்பாக்கி சுடுதலின் போது துப்பாக்கியில் இருந்து எதிர்பார விதமாக தோட்ட வெளியேறி அவரை துளைக்க சுருண்டு விழுந்தார்.


பின்னர் சிகிச்சைக்காக அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. 


இதுகுறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரி சத்தேந்திர சிங் தெரிவிக்கையில், இச்சம்பவம் தொடர்பாக புருசோத்தம் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் மீது IPC 304-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த பிரிவானது கொலை என்னும் பிரிவில் வராது, விபத்தின் காரணமாக என்னும் பிரிவின் கீழ் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.