நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகத-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி லக்ட்சுமி ஹெப்பல்கர் படம் பதித்த கிரைண்டர்கள், பெலகவி பகுதியில் காவல்துறையால் கைப்பற்றப் பட்டுள்ளது.


இந்த கிரைண்டர்கள் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களுக்கு வினியோகித்து ஓட்டு வாங்கும் என்னத்தில் கொண்டு செல்லப் பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஒரு லாரி முழுவதும் ஏற்றிச்செல்லப்பட்ட இந்த கிரைண்டர்களை கர்நாடக காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!