NEET தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை!
நாடுமுழுவதும் NEET தேர்வு இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEET தேர்விற்காக வெளிமாநிலம் செல்லும் புதுவை மாணவர்களுக்கு ரூ.1500 வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது!
நாடுமுழுவதும் NEET தேர்வு இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NEET தேர்விற்காக வெளிமாநிலம் செல்லும் புதுவை மாணவர்களுக்கு ரூ.1500 வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான NEET நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் இத்தேர்வினில் களந்துக்கொள்ள நாடு முழுவதும் சுமார் 13,26,725 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,7,288 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் 2,255 மையங்களில் இத்தேர்வு இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் மட்டும் 170 மையங்கள் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையங்களை வெளிமாநிலங்களில் கொடுத்தப்போது தங்கள் மாநிலத்திலேயே தேர்வு எழுத அனுமதி வேண்டும் என தமிழக மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். எனினும் அவர்களது வேண்டுக்கோளுக்கு நீதிமன்றங்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் தமிழக மாணவர்கள் ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு பயணித்து தேர்வு எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேப்போல் புதுவையே சேர்ந்த மாணவர்களும் வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் செய்தியாளர்களிடன் தெரிவிக்கையில் NEET தேர்வு எழத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களின் பயண செலவிற்காக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1500 உதவித் தொகையினை வழக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்வு எழுத சென்ற மாணவர்கள் தங்கள் தேர்வை முடித்து விட்டு வந்து, தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மாணவரின் வங்கி கணக்கு சேமிப்பு புத்தகத்தின் முதல் பக்க நகல், இருவழி பயணச்சீட்டு ஆகியவற்றை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் அளித்து அந்த நிதியை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்!