புதுச்சேரி: புதுவை CPI(M) உறுப்பினர் கொடூர கொலை தொடர்பாக இன்று கேரளாவின் கன்னூர் அருகேயுள்ள மாஹி பகுதியில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவை மாநிலம் மாஹி பிராந்தியம் பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கனிபொழில் பாபு(49). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரமுகர், கட்டிட ஒப்பந்ததாரரான இவரை நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துள்ளது. இச்சம்பவத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் பாபுவை சரமாரியாக வெட்டி கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து இறந்தார். கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 


தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து பாபுவின் சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



இதற்கிடையில் பள்ளூர் பகுதியை சேர்ந்த பாஜக உறுப்பினர் சம்ஜி (35) என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடந்த இந்த 2 கொலைகளும் அரசியல் போட்டிகாரணமாக அரங்கேறி இருப்பது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த 2 கொலை சம்பவங்களாலும் மாஹி பள்ளூர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அப்பகுதி முழுவதும் காவல்துறையால் குவிக்கப்பட்டுள்ளது!