`காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் அவசியமானது` -கிரண் பேடி!
காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் அவசியமானது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்!
காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் அவசியமானது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்!
காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
காவிரி பிரச்சணைக்கு தீர்வு காண, ஜல்லிக்கட்டு போராட்டத்தினை போல் மீண்டும் இளைஞர்கள் ஒன்றுகூடி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ கட்சி தலைவர்களும் ஒன்றுகூடி இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் மிகவும் அவசியமானது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கடிதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
காவிரி நீா் முழுமையாக கிடைக்காததால், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படைந்துள்ளனர். அவா்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் காவிரி மேளாண்மை வாரியம் அமைத்தல் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்!