புதுவை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நாராயணசாமி முதல் முறையாக டில்லி சென்று பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஜூன் 22-ம் தேதி தனது அமைச்சர்களுடன் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். 


இது குறித்து நாராயணசாமி கூறுகையில்:- புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கேட்பதற்காகவே டில்லி செல்ல உள்ளோம். டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடி மட்டுமின்றி நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோரையும் சந்திக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.