Puducherry: தமிழிசை சவுந்தரராஜன் துணை நிலை கவர்னராக இன்று பொறுப்பேற்பார்
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பேற்கிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார்.
புதுவை: புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பேற்கிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக பதவி வகித்த கிரண் பேடிக்கும் இடையே, தொடக்கத்தில் இருந்தே கடுமையான மோதல் நிலவி வந்தது. மாநில துணைநிலை ஆளுநரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார்.
இந்தநிலையில், கிரண் பேடியை திரும்பப்பெறுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு நாட்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து நேற்று புதுச்சேரி வந்த தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுர்ந்தரராஜன், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், மாநிலத்தில் கவர்னராக பொறுப்பு வகித்து வந்த கிரண்பேடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அதன் அடிப்படையில் பிப்ரவரி 18ஆம் தேதி,வியாழக்கிழமை காலை 9 மணிக்கு, புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பொறுப்பு ஏற்க உள்ளதாக என்று தெலுங்கானா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read | திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்: அசத்தும் தமிழகத்து Petrol Pump
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR