வாக்காளர்கள் ஓட்டுபோட வரவில்லை என்றால் அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பாஜக-க்கு ஓட்டுப்போட வையுங்கள் என எடியூரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பலயுக்திகளை கையாண்டு வருகிறது.


தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது. 


இதை தொடர்ந்து, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று பெலகாவியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கட்சி தொண்டர்களிடம், ”இது ஓய்வெடுக்கும் நேரம் அல்ல. வாக்காளர்கள் யாராவது ஓட்டுபோட வரவில்லை என்று தெரிந்தால், அவர்கள் வீட்டுக்குச் சென்று, அவர்களின் கை கால்களைக் கட்டி, தூக்கிக் கொண்டுவந்து பசவண்ட்ராய்-வுக்கு ஓட்டுப்போட வையுங்கள்’’ என்று பேசினார். பசவண்ட்ராய், கிட்டூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 


எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வன்முறையை தூண்டும் விதமாக பேசி வருவதாகவும், தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கைவிடுத்துள்ளது!