ஜோதிகாவிற்கு சகோதரியாக நடிக்கவுள்ள இரட்டையர்கள் யார்?
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் `காற்றின் மொழி`. இப்படத்தில் ஜோதிகாவின் மூத்த சகோதரிகளாக நடிக்க இரட்டையர்கள் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இப்படத்தில் ஜோதிகாவின் மூத்த சகோதரிகளாக நடிக்க இரட்டையர்கள் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் "தும்ஹாரி சுலு". திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் RJ-வாக வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்த படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார்.
நல்ல வரவேற்பினை பெற்ற இத்திரைப்படத்தினை தமிழில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் ராதாமோகன் இயக்க நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார். இவரது கணவராக நடிகர் வித்தார்த் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஜோதிகாவின் மூத்த சகோதரிகளாக நடிக்க, தமிழ் தெரிந்த இரட்டையார்கள் வேண்டும் என இயக்குனர் அறிவித்துள்ளார். இதுகுறித்து படக்குழுவினர் WhatsApp செய்தி மூலம் தேடலை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கு முன்னதாக 10 ஆண்டகள் முன்பு இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த திரைப்படம் மொழி. இப்பட்டத்தில் இடம்பெற்ற பாடலான 'காற்றின் மொழி' எனும் வரிகளை இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது!