கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், கட்டுமான பணிக்காக ஈராக் சென்றனர். பின்னர் அங்கு IS பயங்கரவாதிகள் ஆதிக்கம் தலைதூக்கிய போது, மொசூல் என்னும் நகரில் இருந்த 39 இந்தியர்கள் மாயமாகினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர்களின் நிலைபாடு குறித்து எந்த தகவலும் வெளியாகத நிலையில் IS பயங்கரவாதிகளால் இவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என கடந்த 2017-ஆம் என தகவல்கள் வெளினது. 


மாயமான இந்தியர்களை மீட்டு தர கோரி அவரது குடும்பத்தார் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஈராக் மோசூல் நகரில் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.


இறந்தவர்களின் உடல்களை ஈராக்கில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனையடுத்து மாயமான இந்தியர்களின் குடும்பங்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.


இந்நிலையில் ஈராக்கில் இறந்த 39 இந்தியர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...