தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி நிர்வாகிகளுடன் இன்று நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமலை அடுத்து அரசியல் களத்தில் குதித்து வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் இருக்கும் நடிகர் ரஜினி அவர்கள் வலுவான அடித்தள கட்டமைப்பை உருவாக்க தனது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


அந்த வகையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மக்கள் மன்ற மகளிர் அணி நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.


கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வந்த நிர்வாகிகள் நியமன பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் தனித் தனியாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.


அதன்படி, கடந்த 10-ம் நாள் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனது போயஸ் கார்டன் இல்லத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து கடந்த மே 13-ஆம் நாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.



இந்நிலையில் இன்று மகளிர் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்தினார். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது...


"ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். நான் துவங்கவுள்ள கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.


நடிகர் கமல் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளதாது குறித்து கேட்டப் போது, கட்சியே துவங்கவ வில்லை பிறகு எப்படி அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.


கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன். கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. 


காவிரி விவகாரம் குறித்து கேட்களையில், அணையின் கட்டுப்பாடு கர்நாடகா அரசிடம் இருப்பது சரியல்ல. ஆணையத்திடம் தான் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்!