கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். ஆனால் பெருபான்மையை (மே 19) நிருப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 


ஆனால் மே 19-ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடப்பதற்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் சார்பில் HD குமாரசாமி அவர்களை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.


இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் குமாரசாமி கடந்த புதன்கிழமை (23-05-2018) முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, இன்று வாக்கெடுப்பின்றி கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமாரை தேர்வு செய்துள்ளனர்.