டிடிவி அணியில் இருந்து நாஞ்சில் வெளியேற காரணம் என்ன?
டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அவர்கள் நேற்று டிடிவி அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். தன்னுடைய வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து அவர் தனது ட்விட்டர பக்கத்தில் பதில் அளித்துள்ளார்!
டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அவர்கள் நேற்று டிடிவி அணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். தன்னுடைய வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து அவர் தனது ட்விட்டர பக்கத்தில் பதில் அளித்துள்ளார்!
சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் அவர்கள் ம.தி.மு.க-வில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தார். பொதுக்கூட்ட மேடைகளில் முழங்கிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அணியுடன் பிணங்கினார். ஜெயலலிதா இவருக்கு வழங்கிய இன்னோவா காரை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் மீண்டும் சசிகலா அணியில் இணைந்த இவர் தினகரன் ஆதரவாளராக மாறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்ற பின்னர், பல மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தினார். அந்த கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் டிடிவி அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
தினகரனின் செயல்பாடுகள் திராவிட கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் தினகரன் அணியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் மேடைகளில் பங்கேற்க விரும்பவில்லை மாறாக இனி இலக்கிய மேடைகளில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வெளியேற்றத்திற்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளதாவது...
"இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரன் அவர்களுக்கு துணை நின்றேன் , தோள் கொடுத்தேன் , அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்கதுணையாகவும் இருக்க தீர்மானித்தேன்
அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னை பார்த்தார்கள்.என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை , அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்" என தெரிவித்துள்ளார்!