டெலிகாம் நிறுவனங்களின் ஜாம்பவான் RelianceJio ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு JioFi exchange சலுகை விற்பனையினை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Wifi டோங்கல் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டோங்களினை JioFi exchange சலுகை விற்பனையின் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.



இந்த சலுகையினை பெற இறுதி நாள் என இதுவரை தேதி நிர்ணயிக்கப்படவில்லை. எனினும் குறைந்த காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை விற்பனை இருக்கும் எனவும், இந்த சலுகை குறித்த தகவல்கள் ரிலையன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளது என தெரிவிக்கப்படுள்ளது.


இந்த புதிய சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.2,200 வரை திரும்பப்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சலுகையினை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது...


  • JioFi@999 வாங்க வேண்டும்.

  • முதல் ரீசார்ஜாக ரூ.198 (அ) ரூ.299 -க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

  • தங்களுடைய பழைய டோங்களினை JioStore / Reliance Digital Store-ல் திரும்ப அளித்துவிடுங்கள்.

  • பழைய டோங்களின் எண்ணினை கொடுத்து அதனை புதிய JioFi எண்ணுடன் இணைத்துக்கொள்ளவும்.

  • பின்னர் ரூ.2200 வரையிலான பணம் உங்களுடைய Jio அக்கவுன்டில் உடனடியாக ஏற்றப்படும்.