மியாமி தோல்வி காரணமாக தனது முதல் இடத்தை இழக்கும் நிலைக்கு ரோஜர் பெடரர் தள்ளப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் நடைப்பெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது போட்டியில் உலகின் நம்பரவ 1 வீரரான பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வி காரணமாக அவரது முதல் இடம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


இப்போட்டியின் முதல் செட்டில் 6-3 என பெடரர் வெற்றிப்பெற்றாலும், இதற்கு இரண்டாவது செட்டில் 6-3 என கணக்கில் தனாசியிடம் கைவிட்டார். பின்னர் வெற்றியை தீர்மாணிக்கும் 3-வது செட்டில் பெடரர் 6-7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.


போட்டியின் முடிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் தனாசி கொக்கிநாகியிடம் 6-3 3-6 6-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவரது தோல்வி பெடரரின் முதலிடத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடும் என தெரிகிறது!