21 பொதுத்துறை வங்கிகளில் ரூ.8.26 லட்சம் கோடி வாராக்கடன்!
கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு இணையமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்!
கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.2.41 லட்சம் கோடி வாராக்கடன்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு இணையமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்!
2014-15-ஆம் நிதியாண்டில் இருந்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் வரை இருந்த இந்த கடன்கள், வரவு செலவு நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
எனினும் இதுதொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரசாத் சுக்லா தெரிவிக்கையில் "வரவு செலவு கணக்கில் இருந்து மட்டுமே கடன்களின் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது. எனவே கடன் வாங்கியவர்கள் இந்த தொகையை செலுத்தியாக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்
இந்த வரா கடன்களை வசூலிக்கும் பணி பல காலமாக நடந்து வருகிறது. எனவே வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கம் செய்வதினால் கடன் வாங்கியவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலினை வெளியிட ரிசர்வ் வங்கி சட்டம் அனுமதிக்காததால் அந்த பட்டியலை தற்போது வெளியிட இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்திய வங்கித் துறையின் வாராக்கடன் இரு மடங்காக அதிகரித்து உள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி 21 பொதுத்துறை வங்கிகளில் 8.26 லட்சம் கோடி அளவுக்கு வாராக்கடன் நிலுவையில் உள்ளது. இந்த வங்கிகள் வழங்கியுள்ள கடனில் இது 15.8% ஆகும் என மத்திய அரசின் விளக்கத்தினை மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.