ரஷ்ய உளவாளி மீது நடத்திய ரசாயன விஷ தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்க அரசு எடுத்த நடவடிக்கைக்கு பதிலடியாக, 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டன் நாட்டில் தங்கியிருந்த ஒய்வு பெற்ற ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது, லண்டன் நகரின் பொது இடத்தில் வைத்து ரசாயன விஷ தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது ரஷ்ய அரசுதான் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே குற்றம் சாட்டினார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.


இதைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு ஆதரவாக, 60 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக ரஷ்ய அரசு தற்போது முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. 60 அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் மாஸ்கோவில் பணியாற்றிவரும் 58 அதிகாரிகள் மற்றும், எகடெரின்பர்க் நகரில் பணியாற்றி வரும் 2 பேர் இதில் அடங்குவர்.


ஏப்ரல் 5ம் தேதிக்குள் ரஷ்யாவை விட்டு இவர்கள் வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ராவ், "இது ஒரு பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.