மோகன்லால்-ன் "ஒடியன்" திரைப்படத்திற்கு என இசையமைப்பாளர் சாம் CS ப்ரதியேகமான இசை கருவியை பயண்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருபட்ட தோற்றத்தில் மோகன்லால் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படன் ஒடியன். இத்திரைப்படத்திற்கு புரியாத புதிர், விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் CS இசையமைக்கின்றார். இப்பட்டத்தின் பின்னணி இசையினை நேர்த்தியாக்க சுமார் 15 அடி நீளம் கொண்ட மூங்கில் இசை கருவி ஒன்றினை அவர் பயண்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஒடியன் - இப்படத்தில் இளம் நாயகனாக நடிக்கின்றார் நம் மோகன் லால், இதற்காக இவர் 15 கிலோ எடை வரை குறைத்துள்ளார் என தெரிகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் டீஸரில் மலையாள சூப்பர் ஸ்டார் லால் மிகவும் மெலிந்து, இளமையான தோற்றத்தில் தோன்றினார். இதனால் ரசிகர்களிடையே பெறும் எதிர்பார்ப்பினை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்... லால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து 18-கிலோ வரை குறைத்துள்ளார், மேலும் இதற்காக அவர் பிரான்சை சேர்ந்த யோகா மற்றும் தோல் மருத்துவர்களின் உதவியை நாடி உடற்பயிற்சி மேற்கொண்டு தனது இலக்கை அடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


இப்படத்திற்கான படப்பிடிப்புகள் பாலக்காடு, கோவை, பொள்ளாச்சி, ஹைதராபாத், வாரணாசி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் நாள் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!