அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் குறித்து கேள்வி எழுப்பிய சிறுவனிடம், வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று தலைநகர் வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ் (Sarah Huckabee Sanders) வழக்கம் போல் பங்கேற்றுள்ளார்.  அப்போது, நிருபர்கள் மத்தியில் இருந்த சிறுவன், பள்ளி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என வினா எழுப்பியதோடு, பள்ளி செல்வதற்கு தங்களைப் போன்ற மாணவர்களுக்கு அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


இதற்கு பதிலளித்துப் பேசிய சாரா, மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்திற்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக, பதற்றத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் தெரிவித்தார்.