காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்,பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரவணன் சுரேஷ் (வயது 50) என்ற நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீக்குளித்ததில் 80 சதவீத காயம் அடைந்த சரவணன் சுரேஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


முன்னதாக, ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வரும் தர்மலிங்கம் என்பவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண் எண்ணை ஊற்றி தீக்குளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.