China vs Aliens: சீனாவுக்கு சிக்னல் கொடுக்கும் ஏலியன்கள்: ஆச்சரியம் ஆனால் உண்மையா
சீனாவை வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயல்வது ஏன்? ஏலியன்கள் கொடுக்கும் சிக்னல்கள் காட்டும் சமிக்ஞைகள்
வேற்றுகிரகவாசிகளிடமிருந்து சிக்னல் கிடைத்ததாக சீனா தெரிவித்ததாக வெளியாகும் செய்திகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.
சீன அரசுக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ் ஒன்றில் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சிக்னல்கள் கிடைத்தது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கையை பிறகு அந்த பத்திரிக்கை நீக்கிவிட்டது. அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான காரணம் எதையும் அந்த நாளிதழ் தெரிவிக்கவில்லை.
வேற்றுகிரகவாசிகள் இறுதியாக மனிதர்களை தொடர்பு கொண்டார்களா? ஆம் என்று சொல்வதற்கு சீனாவின் பத்திரிக்கை ஆதாரம் இருந்தாலும், அது இப்போது நீக்கப்பட்டுவிட்டதால் குழப்பமே மிஞ்சுகிறது.
சீனாவின் அரசு ஆதரவு பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நாளிதழ் (Science and Technology Daily) ஏலியன்கள் சிக்னல் கொடுத்தது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. ஆனால், பின்னர் அதை நீக்கியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகளின் ரீஎண்ட்ரீ? சவுத்தாம்ப்டன் குண்டுவெடிப்பு எழுப்பும் கேள்விகள்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான ஸ்கை ஐ மூலம் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டன.
சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி டெய்லியின் செய்தியாளர், ஜாங் டோன்ஜி என்ற விஞ்ஞானியை மேற்கோள் காட்டி, சிக்னல் முந்தையவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் குழு அதை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
ஜாங் டோன்ஜி, பெய்ஜிங் நார்மல் பல்கலைக்கழகம், சீன அறிவியல் அகாடமியின் தேசிய வானியல் ஆய்வகம் மற்றும் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவற்றால் இணைந்து நிறுவப்பட்ட வேற்று கிரக நாகரீக தேடல் குழுவின் தலைமை விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை வெளியிடப்பட்டது மற்றும் நீக்கப்பட்டது ஏன் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் Science and Technology Daily என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!
தற்போது வேற்று கிரகவாசிகள் தொடர்பான இந்தச் செய்தி இணையத்தில் பரபரப்பான விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. சீன ட்விட்டரான வெய்போவில் இந்த தலைப்பு பெரிய அளவில் பேசுபொருளாக மாறிவிட்டது.
பூமியின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியான ஸ்கை ஐ, சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது 500 மீட்டர் (1,640 அடி) விட்டம் கொண்டது. இது செப்டம்பர் 2020 இல் வேற்று கிரக வாழ்க்கைக்கான தேடலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இதற்கு முன்னரும் இரண்டு சந்தேகத்திற்கிடமான சமிக்ஞைகளை சீனாவின் ஸ்கை ஐ விஞ்ஞானிகள் கண்டறிந்ததுள்ளனர், 2020 மற்றும் 2022இல் இதேபோன்று சந்தேகத்திற்கிடமான சமிக்ஞைகள் கிடைத்ததாக சீனா தெரிவித்திருந்தது.
மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா
மேலும் படிக்க | அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR