நிலவை நோக்கி அடுத்த பயணம்: 2021 துவக்கத்தில் செல்ல தயாராகிறது Chandrayan-3!!
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திரயான் -3, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தார்.
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திரயான் -3 (Chandrayaan 3), 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தார். சந்திரயான் -3 சந்திரயான் -2 இலிருந்து வித்தியாசமாக இருக்கும் என்று சிங் மேலும் கூறினார். இதில் ஆர்பிட்டர் இருக்காது, ஆனால் ஒரு லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை இருக்கும் என்றார் அவர்.
சந்திரயான் -2 (Chandrayaan 2) செப்டம்பர் 2019 இல் செலுத்தப்பட்டது. இந்தியாவின் முதன்மையான விண்வெளி நிறுவனமான இஸ்ரோ (ISRO) 2020 ஆம் ஆண்டில் சந்திரயான் -3 ஐ செலுத்த திட்டமிட்டது நினைவிருக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து, வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி விதித்த லாக்டௌன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
சந்திரயான் -2 ஜூலை 22, 2019 அன்று செலுத்தப்பட்டது. அது சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் செப்டம்பர் 7 ஆம் தேதி எதிர்பாராத விதமாக கடுமையான முறையில் தரையிறங்கியது. இதனால், முதல் முயற்சியிலேயே நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கிய முதல் நாடு என்ற பெருமைக்காக ஏங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் கனவும் கலைந்து போனது.
இருப்பினும், ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த மிஷனின் ஆர்பிட்டர் (Orbiter) நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது. பல தரவுகளையும் அது தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கிறது.
ALSO READ: 174 கோடி ரூபாய் செலவில் 6 ஆண்டுகளாக நாசா கட்டிய கழிப்பறையின் சிறப்பம்சம் என்ன?
இதற்கிடையில், 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சந்திரனுக்கான இஸ்ரோவின் முதல் பணித்திட்டமான சந்திரயான் -1 (Chnadrayaan 1), நிலவின் துருவங்களில் துருப்பிடித்திருக்கலாம் என்பதைக் காட்டும் படங்களை அனுப்பியுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் முக்கிய கருத்து என்னவென்றால், சந்திரனின் மேற்பரப்பில் இரும்புச்சத்து நிறைந்த பாறைகள் இருப்பதாக ஏற்கனவே அறியப்பட்டாலும், நீர் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதைப் பற்றி இதுவரை அறிந்ததில்லை. ஆனால், துருவை உருவாக்க இரும்புடன் நீர் மற்றும் ஆக்சிஜனின் தொடர்பு இருக்க வேண்டும் என்பதால், நிலவிலிருந்து சந்திரயான்-1 அனுப்பியுள்ள படங்கள் முகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் (NASA) விஞ்ஞானிகள், இதில் பூமியின் வளிமண்டலம் அளிக்கும் ஒரு உதவியும் காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். அதாவது, பூமியின் வளிமண்டலம் நிலவையும் பாதுகாக்கக்கூடும் என்பது அவர்களது கருத்து. இவ்வாறு, சந்திரயான் -1-ன் நிலவைப் பற்றிய தரவுகள், நிலவின் துருவங்களில் தண்ணீர் இருக்கக்கூடும் என்பதௌ குறிப்பிடுகின்றன என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
ALSO READ: நிலவில் தங்குவதற்கு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப நாசா திட்டம்..