சீன ராக்கெட்டின் ஒரு பெரிய பகுதியானது இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடு ஏதுமின்றி திரும்ப வரும் என்ற எதிர்பார்ப்பு அச்சத்தை அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அச்சம் ஏதும் தேவையில்ல்லை என்று கூறும் பெய்ஜிங், ராக்கெட் திரும்ப பூமிக்குள் நுழைவதால் மிகக் குறைவான ஆபத்து இருப்பதாகவும், பெரிய அளவில் எந்தவொரு சேதத்திற்கும் வாய்ப்பில்லை என்று கூறுகிறது.
 
லாங் மார்ச் -5 பி ராக்கெட் (Long March-5B rocket) ஏப்ரல் 29 ஆம் தேதி சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை பூமியின் சுற்றுப்பாதையில் ஏவியது. அதன் 18 டன் எடை கொண்ட முக்கிய பிரிவு இப்போது விழும் நிலையில் உள்ளது. அது பூமியில் எங்கே, எப்போது நுழையும் என்று துல்லியமாக சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  


Also Read | World Test Championship இந்திய அணி அறிவிப்பு, ஜடேஜா உள்ளே


பென்டகனின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று சுமார் 2300 GMT மணியளவில் சீனாவின் ராக்கெட் பகுதி வரலாம். கணிக்கப்பட்ட இந்த நேரத்தில் இருந்து ஒன்பது மணிநேரம் கூடுதலாகவோ அல்லது குறைவான சமயத்திலோ பூமியின் எந்தப் பகுதியிலும் சீனாவின் ராக்கெட் வந்து விழலாம். 


மறு நுழைவில் பெரும்பாலான ராக்கெட் கூறுகள் அழிக்கப்படலாம் என்று சீன அதிகாரிகள் நம்புகின்றனர்.


"தீங்கு விளைவிக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெள்ளிக்கிழமையன்று (மே 07, 2021) செய்தியாளர்களிடம் கூறினார்.


Also Read | Venkaboys: ராகுல் டிராவிட்டின் கோப அவதாரம், காரணம் இதுதான்…


ராக்கெட் - அல்லது அதன் சில பகுதிகள் - தரையிறங்கும் இடத்தைப் பற்றி ஊகங்கள் எழுந்துள்ள போதிலும், 70 சதவிகித நீரால் ஆன பூமி கிரகத்தில் கடலில் வாய்ப்பே அதிகம் என்று கூறப்படுகிறது.  


"இது யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மைக் ஹோவர்ட் கூறினார்.


ராக்கெட் பிரிவை அமெரிக்கா கண்காணித்து வருவதாக ஹோவர்ட் கூறினார், ஆனால் "பூமியின் வளிமண்டலத்தில் அது எப்போது நுழையும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்று ஹோவர்ட் கருதுகிறார்.


Also Read | COVID-19 நிவாரணப் பணிகளுக்காக 2 கோடி கொடுத்த விராட் – அனுஷ்கா தம்பதி


இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அதை சுட்டு வீழ்த்துவதற்கான எந்த திட்டமும் , அமெரிக்க ராணுவத்திடம் இல்லை என்று கூறினார். ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் விஷயத்தில் சீனா அலட்சியமாக இருப்பதாகவும் கூறினார்.


"பொருளின் அளவைப் பொறுத்தவரை, பெரிய துண்டுகள் எஞ்சியிருக்கும்" என்று பாரிஸ்-பிஎஸ்எல் ஆய்வகத்தின் வானியலாளர் (astronomer) புளோரண்ட் டெலிஃபி (Paris-PSL Observatory) கூறினார்.


"மக்கள் வசிக்கும் பகுதியில் சிதைவுகள் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அநேகமாக அந்த சாத்தியக்கூறு ஒரு மில்லியனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் இருக்கும்."


2020 ஆம் ஆண்டில், மற்றொரு லாங் மார்ச் ராக்கெட்டிலிருந்து சிதைபாடுகள் ஐவரி கோஸ்டில் உள்ள கிராமங்களில் விழுந்தன, இதனால் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டது, ஆனால் மக்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் யாரும் பலியாகவில்லை என்பதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விஷயம் ஆகும்.


Also Read | கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் - EPS and OPS தரப்பு மோதல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR