இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
சூரிய உதயம் என்பது ஆச்சரியமான நிகழ்வ்ல்ல, இது தினசரி வாடிக்கை என்றாலும், சூரிய உதயம் என்பது புத்துணர்ச்சி கொடுப்பது. சூரிய உதயத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.
ஆனால் பூமியில் இது சரி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் பற்றிய சுவாரஸ்யமான மற்றும் கற்பனைக்கு இனி வடிவம் கிடைத்துவிட்டது.
சில நாட்களுக்கு முன்பு, நாசாவின் (NASA) இன்சைட் லேண்டர் செவ்வாய் மேற்பரப்பில் இருந்து சூரிய உதயத்தின் அற்புதமான வீடியோவைப் படம்பிடித்தது. விண்வெளி நிறுவனம் நாசா, அந்த அரிய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டது.
நாசாவின் இன்சைட் லேண்டர் (InSight lander) ஏப்ரல் 10, 2022 அன்று இந்த அழகான செவ்வாய் கிரகத்தின் சூரிய உதய புகைப்படத்தை எடுத்தது. இது இன்சைட் லேண்டரின் பயணத்தின் 1198வது செவ்வாய் நாள்.
செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை (crust, mantle and core) ஆய்வு செய்வதற்கான நாசாவின் முதல் திட்டம் InSight ஆகும். இன்சைட் என்பது நில அதிர்வு ஆய்வுகள், புவியியல் மற்றும் வெப்பப் போக்குவரத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி உட்புற ஆய்வு மேற்கொள்வதாகும்.
மேலும் படிக்க | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்
நவம்பர் 2018 இல் இன்சைட் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியது. அது செவ்வாய் கிரகத்தின் எலிசியம் பிளானிஷியா என்ற பகுதியைத் தொட்டது. முதல் செவ்வாய் வருடத்தின் பூர்வாங்க பணியின் நோக்கங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
செவ்வாய் கிரக ஆண்டு பூமியில் ஒரு வருடத்தை விட நீண்டது. பூமியை விட சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் அமைந்திருக்கிறது. எனவே, செவ்வாய் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க, பூமியை விட அதிக நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு செவ்வாய் ஆண்டு 687 பூமி நாட்கள் இருக்கும். ஒரு பூமி ஆண்டில் 365/ 366 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா, தனது உயர் தொழில்நுட்ப தொலைநோக்கிகள், ஹப்பிள், சந்திரே எக்ஸ்ரே (Chandray Xray) ஆகியவற்றின் உதவியுடன் வேற்று கிரக நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து, நமது கண்களுக்கு விருந்தளிக்கிறது.
நாம் பார்க்கும் சூரியனை செவ்வாய் கிரகத்தில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாசா, தனது மற்றொரு மயக்கும் பதிவின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR