Corona Symptoms: மாறிய கொரோனாவின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நோய்த்தொற்று அறிகுறிகளை உருவாக்கும் விதத்தில் மாற்றத்தை தெரிவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை நோய்த்தொற்று அறிகுறிகளை உருவாக்கும் விதத்தில் மாற்றத்தை தெரிவிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.
அறிகுறிகளின் புதிய பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர். COVID-19 இன் பொதுவான அறிகுறிகளான காய்ச்சல், உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு, குளிர், மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். பல ஆய்வுகள் இளஞ்சிவப்பு கண்கள், காஸ்ட்ரோனமிகல் நிலைமைகள் மற்றும் செவித்திறன் குறைபாடு ஆகியவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்றன.
கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது: சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது அல்லது வெண்படல அழற்சி (conjunctivitis) தோன்றுவது COVID-19 நோய்த்தொற்றின் அறிகுறியாகும். இளஞ்சிவப்பு கண்கள் என்பதில், கண்கள் சிவப்பது, கண்ணில் வீக்கம் மற்றும் கண்களில் நீர் வருவது ஆகியவையும் அடங்கும். கொரோனா வைரஸின் புதிய திரிபால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் செய்த ஆய்வில் இந்த அறிகுறிகள் தெரிந்தன.
Also Read | கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியாவில் ஒரே நாளில் 115,736 பேர் பாதிப்பு
காது கேளாமை: அண்மையில் கேட்கும் திறனில் ஏதாவது வித்தியாசமோ அல்லது ஒலியை கேட்கும் போது அது மிகவும் குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ, அது COVID-19 இன் அடையாளமாக இருக்கலாம். COVID-19 நோய்த்தொற்று செவிப்புலன் பிரச்சனைகளை கொடுப்பதாக சர்வதேச ஆடியோலஜி சஞ்சிகையில் (International Journal of Audiology) வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. COVID-19 செவிப்புலன் மற்றும் வெஸ்டிபுலர் (vestibular) சிக்கல்களுக்கு இடையிலான தொடர்பை 56 ஆய்வுகள் அடையாளம் காட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோவிட் இரண்டாம் அலை தாக்குதலில் செவிப்புலன் இழப்பு 7.6 சதவிகிதம் என்று 24 ஆய்வுகளில் தெரிவிக்கின்றன.
இரைப்பை குடல் அறிகுறிகள் (Gastrointestinal Symptoms): கோவிட் இரண்டாம் அலையினால் இரைப்பை குடல் பாதிப்பு தொட்ர்பான புகார்களும் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோவிட் -19 தொற்று, சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.
இருப்பினும், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப் பிடிப்பு, குமட்டல் மற்றும் வலி ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. எனவே செரிமானத்தில் ஏதேனும் அசெளகரியம் ஏற்பட்டால் அது கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கமாகவும் இருக்கலாம்.
Also Read | Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR