‘Insect Apocalypse’ என்றால் என்ன தெரியுமா? உலகம் அழிவை நெருங்கிவிட்டதா?
பூமி ஒவ்வொரு ஆண்டும் 2% பூச்சிகளை இழந்து வருகிறது. விஞ்ஞானிகள் இதை ‘insect apocalypse’ என்று அழைக்கிறார்கள்.
இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு விதமான உயிரினங்களும் வாழ்கின்றன. மனிதர்களின் எண்ணிக்கை பூமிக்கு பலவிதமான சிரமங்களை அதிகரித்து வருகிறது. சொல்லப்போனால், மனிதர்கள் அதிகரிப்பு, ‘பூமிக்கு பாரம்’ என்றால், பிற உயிரினங்களின் எண்ணிக்கைக் குறைவது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளை அருகச் செய்துவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகின்றனர்.
பூமி ஒவ்வொரு ஆண்டும் 2% பூச்சிகளை இழந்து வருகிறது. விஞ்ஞானிகள் இதை ‘insect apocalypse’ என்று அழைக்கிறார்கள்.
நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் (ecosystems) முக்கியப் பங்கு வகிக்கும் பூச்சிகளின் இருப்பு குறைவது கவலைகளை அதிகரிக்கிறது.
பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு வல்லுநர்கள் பல காரணங்களை பட்டியலிடுகின்றனர். காலநிலை மாற்றம் (climate change), களைக்கொல்லிகள் (herbicides), ஆக்கிரமிப்பு இனங்கள் (invasive species), பூச்சிக்கொல்லிகள் (insecticides) மற்றும் நிலத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது என பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு காரணம் மக்களின் செயற்பாடுகளே எனவே, உலகில் பூச்சிகளின் அழிவுக்கு நேரடி பொறுப்பு மக்களே என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகின்றனர். முன்பு எப்போதும் இல்லாத வகையில், பூமி ஆண்டொன்றுக்கு 1 முதல் 2 சதவீத பூச்சிகளை இழந்து வருகிறது!
ALSO READ | மனிதர்களுக்கும் மட்டுமல்ல, கொரில்லாக்களுக்கும் ஆபத்தாகிறதா Corona?
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளில் 56 பேர் இணைந்து எழுதிய “Proceedings of the National Academics of Science” என்ற அறிவியல் சஞ்சிகையில் “பூச்சி பேரழிவு”(“insect apocalypse”) கட்டுரை வெளியாகியுள்ளது.
கனெக்டிகட் பல்கலைக்கழகத்தின் (University of Connecticut) பூச்சியியல் வல்லுநர் - டேவிட் வாக்னர் இது தொடர்பான 12 ஆய்வுகளின் முதன்மை எழுத்தாளர் ஆவார்.
“Insect apocalypse” என்பதில் பூச்சிகள் என்ற வரையறைக்குள் எந்தெந்த பூச்சிகளை கொண்டுவருவது என்பதை முடிவு செய்வது கடினமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் பூச்சிகளின் இழப்பு பெரியதா என்பதை விஞ்ஞானிகள் கண்டறிய வேண்டும் என்று வாக்னர் கூறுகிறார்.
"ஆனால் கவலைப்பட சில காரணங்கள் உள்ளன, ஏனெனில் ஒரு குறிப்பிட்ட உயிரினம் பெருமளவில் குறைந்துபோவது பூமிக்கு ஆபத்தானது" என்று வாக்னர் கூறுகிறார்.
ஆய்வின் மற்றொரு எழுத்தாளர் - இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மே பெரன்பாம் (May Berenbaum) என்பவர், ’பூச்சிகளின் இழப்பை சேதத்தின் அளவைக் கண்டுபிடிக்க மிகவும் குறிப்பிடத்தக்க அளவீடுகள் இல்லாமல் இருந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றத்துடன் ஒப்பிடலாம்’ என்று கூறுகிறார். .
பூச்சிகள் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு பூச்சிகள் கழிவுகளை அகற்ற உதவுகின்றன. பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இது வேளாண்மையில் மிகவும் முக்கியமான விஷயம். வாக்னரின் கூற்றுப்படி, பூச்சிகள் "இயற்கை அன்னையையும், வாழ்க்கையும் பிணைக்கும் முக்கியக் காரணி" ஆகும்.
ALSO READ | பிரபலமான பான பொருட்களிலிருந்து “living materials” உருவாக்கலாம் தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR