புதுடெல்லி: "Asteroid 2020 ND” என்று பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான  சிறுகோள் (asteroid) ஒன்று, இன்று, அதாவது, ஜூலை 24 ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூமியிலிருந்து இந்த asteroid உள்ள தூரம்தான் இதை மிகவும் ஆபத்தான் பிரிவில் வைத்திருக்கிறது.


Asteroid 2020 ND சுமார் 170 மீட்டர் நீளம் கொண்டது என்றும் 48,000 கி.மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் NASA தெரிவித்துள்ளது.


Asteroid 2020 ND பூமிக்கு சுமார் 0.034 வானியல் அலகுகள் (astronomical units) அதாவது சுமார் 5,086,328 கிலோமீட்டர் தூரம் வரை வரக்கூடும் என NASA எச்சரித்துள்ளது.


இருப்பினும், இந்த சிறுகோள் பூமியிலிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றும் NASA தெரிவித்துள்ளது.


ALSO READ: Hope என்ற நம்பிக்கை விண்கலனை செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பியது UAE


NASA-வின் கூற்றுப்படி, அடுத்த ஆறு மாதங்களில் பூமியை மற்றொரு மிகப்பெரிய சிறுகோள் அணுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 820 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கும்.


இந்த மாபெரும் விண்வெளி பாறை நவம்பர் 29 ஆம் தேதி 4.3 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் பூமியை அணுகும். மேலும் 19.3 என்ற H Value-வை இது பெற்றுள்ளது. இது, இப்பாறையை NASA-வின் CNEOS PHA வகைப்பாடு பட்டியலிலிருந்து விலக்கி வைக்கிறது.


1 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட சுமார் 1 பில்லியன் சிறுகோள்கள் இருக்கக் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பிளானட்டரி சொசைட்டி கூறுகிறது. குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடிய பொருள்கள் 30 மீட்டரை விட பெரியவையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 சிறிய சிறுகோள்கள் பூமியைத் தாக்குகின்றன. ஆனால் இவற்றால் பூமியில் பெரிய சேதம் ஏற்படுவதில்லை.


2022 ஆம் ஆண்டில் Didymos அமைப்பின் சிறிய சிறுகோள் மீது ஒரு விநாடிக்கு 6 கி.மீ என்ற வேகத்தில் தாக்கும் நோக்குடன் 2021 ஆம் ஆண்டு DART செயல்முறை துவக்கப்படும் என NASA தெரிவித்தது. இதன் கட்டுமானப் பணிகளை தான் துவக்கி விட்டதாக NASA 2018 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.