புதுடெல்லி: ஒருவர் இறந்த பிறகு குழந்தையை பெற்றெடுக்க முடியுமா என்ற செய்தி கேட்பதற்கு மிகவும் விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அது சாத்தியமா என்ற கேள்விக்கு சாத்தியமே என்ற பதிலை கொடுக்கிறது தொழில்நுட்ப முன்னேற்றங்கள். அடுத்த கேள்வி, ஒருவரின் இறப்புக்கு பிறகு அவர்களது வாரிசாக குழந்தையைப் பெற்றுக் கொள்வது சாத்தியம் என்றால் அதன் செயல்முறை என்ன என்பதாகவே இருக்கும். வாழ்க்கையில் மனிதர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தவிக்க விட்டு செல்லும் நேரங்கள் ஒருநாள் வருவது என்பது நிதர்சனமான உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமுறையைத் தொடர சந்ததியினரைப் பெற விரும்புபவர்கள், இருக்கும்போதே குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள், ஆனால் திடீர் மரணங்கள் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அசாதாரணமானவை. ஒருவர் இறந்த பிறகும் அவரது குழந்தை பிறந்து அவரது குடும்பத்தின் வாரிசாக மாறமுடியும். அதற்கு மருத்துவ தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.


இறந்தவரின் உடலில் இருந்து விந்தணுக்கள் அகற்றப்பட்டு சேமித்து வைக்கப்படும் இந்த செயல்முறை PSR (மரணத்திற்குப் பின் விந்தணு மீட்டெடுப்பு) என்று அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்கும் | ரோபோட்டுகளும் இனி குழந்தைகளை பெற்றெடுக்கும் - புதிய கண்டுபிடிப்பு


42 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்


சுமார் 4 தசாப்தங்களுக்கு முன்பு வரை, ஒருவரின் மரணத்திற்கு பின்பு அவரது வாரிசு உருவாவது பற்றி யாரும் யோசித்திருக்க மாட்டார்கள், ஆனால் 1980 இல் முதன்முறையாக இந்த அதிசயம் செய்யப்பட்டபோது, ​​​​மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.


1980 ஆம் ஆண்டில், 30 வயதான ஒரு நபர் ஒரு சாலை விபத்தில் சிக்கினார், அவருக்கு மூளைச்சாவு அடைந்தார் ஏற்பட்டது. குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்று யோசித்த அந்த இளைஞரின் பெற்றோர்  எடுத்த முடிவு, முன்னுதாரணமாக மாறியது.


பரம்பரையின் தொடர்ச்சி என்ற நம்பிக்கையே, இது போன்ற குழந்தை பிறப்புக்கு ஆணிவேராக இருக்கிறது. முதல் நிகழ்வுக்கு பிறகு, இதே விருப்பத்துடன் பலர் இந்த முறையை செயல்படுத்த விரும்புகின்றனர். மருத்துவத் துறையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு 19 ஆண்டுகளுக்குப் பிறகு, 1999 இல் இந்த முயற்சி வெற்றி பெற்றது.


மேலும் படிக்க | நீருக்கடியில் திருமணம் புரிந்த தம்பதி நீடூழி வாழ்க!!


ஆனால், உலகின் அனைத்து நாடுகளும் இதை ஆதரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆணின் விந்தணுவை வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும் என்றால், ஒருவர் இறந்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் விந்தணு மறுசீரமைப்பு செயல்முறை செய்யப்பட வேண்டும்.


விந்தணு மறுசீரமைப்பு செயல்முறை


ஆரம்ப கட்டங்களில், அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் விந்தணு மறுசீரமைப்பு செயல்முறை அதிகளவில் பயன்படுத்தப்பட்டது, இதில் ஒருவர் இறந்த பிறகு அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரின் சந்ததியை அதிகரிக்க இந்த செயல்முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர், இந்த செயல்முறையின் நெறிமுறை குறித்து பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்ட பின்னர், பல நாடுகளில் இதை தடை செய்ய கோரிக்கை எழுந்தது.


விக்டோரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் தைவான் போன்ற நாடுகளில் இறப்புக்குப் பின் குழந்தை பெறுவதற்காக கருவூட்டும் நடைமுறைக்கு தடை உள்ளது. அமெரிக்காவில் இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லாததால், மக்கள் இந்த செயல்முறைக்கு விண்ணப்பிக்கிறார்கள். விண்ணப்பிப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.  


மேலும் படிக்க  | உங்கள் முகத்தை ரோபோக்கு கொடுத்தால் 1.5 கோடி ரூபாய் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ