பிளாஸ்டிக் பயன்பாடு உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மோசமாக்குகிறது என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. ஓரளவுக்கு அதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் முழு அளவிற்கு மக்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் விலங்குகள், பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.


ஆனால், பிளாஸ்டிக்கின் தாக்கம், நாம் உண்ணும் உணவிலும் கலந்துவிட்ட அபாயமான கட்டத்திற்கு நிலைமை மோசமாகிவிட்டது என்ற அதிர்ச்சியான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.


நாம் உண்ணும் இறைச்சிகளில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நெதர்லாந்தின், Vrije Universiteit Amsterdam (VUA) விஞ்ஞானிகள் முதல் முறையாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களைக் கண்டறிந்துள்ளனர். 


பண்ணைகளில் பசுக்கள் மற்றும் பன்றிகளின் இரத்தத்தில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர், சோதனை செய்யப்பட்ட இறைச்சி மற்றும் பால் பொருட்களில் பெரும்பாலனவற்றிலும், ரத்த மாதிரியிலும் பிளாஸ்டிக் மாசுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஒருபோதும் தவிர்க்கக்கூடாத புரத உணவுகள் இவை


ஆய்வுகளின் போது, ​​சோதனை செய்யப்பட்ட விலங்குகளின் ஒவ்வொரு மாதிரியிலும் பிளாஸ்டிக் துகள்கள் காணப்பட்டன. இது மாசுபாட்டின் உச்சத்தைக் காட்டுகிறது. உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில் பேக்கேஜிங் செய்வதாலும் இறைச்சியில் பிளாஸ்டிக் துகள் கலக்கலாம். .


மனித இரத்தத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக மார்ச் மாதத்தில், VUA ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக தெரிவித்தனர். விலங்கு பொருட்கள் பற்றிய ஆய்வை நடத்துவதற்கும் அவர்கள் அதே செயல்முறையைப் பின்பற்றினர். இரத்தத்தில் உள்ள துகள்கள், ரத்தம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும்போது ஆங்கங்கே உறுப்புகளில் தங்கக்கூடும் என்று அந்த ஆய்வின் அறிக்கை குறிப்பிடுகிறது.


 பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களையோ அல்லது பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறதா இல்லையா என்பதை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.


இரத்தத்தை அளவிடும்போது, ​​காற்று, நீர், உணவு மற்றும் பலவற்றில் இருந்து உறிஞ்சப்பட்ட அளவை கண்டுபிடிக்கிறோம். இது முக்கியமான ஆய்வாகும். வாழ்க்கை எவ்வாறு நம்மை பாதிக்கிறது என்பதை உணர்த்தும் ஆய்வு இது.



  
கடலின் ஆழம் முதல் நெடிதுயர்ந்த மலை உச்சி வரை, மனிதர்கள் பூமி கிரகத்தில் சிறிய பிளாஸ்டிக் துண்டுகளால் ஆன குப்பைகளை மலைபோல குவித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் தாக்கமானது நமது உடலில் மைக்ரோபிளாஸ்டிக் ஊடுருவி விட்டது என்று சமீபத்தில், AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  


ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் மில்லியன் கணக்கான டன் பிளாஸ்டிக், சிறிய துண்டுகளாக சிதைகிறது.


வெறும் கண்ணுக்குப் புலப்படாத, பல சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருக்கும் என்றும், அவை நம்மைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருப்பதாகவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கற்பனை செய்து பார்க்கவில்லை.


ஆனால் அது உண்மை என்று உறுதியாகிவிட்டது. அதேபோல, மனித உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள் இருக்கும் என்பதை நாம் இன்னும் கற்பனை செய்யவில்லை என்றாலும் அந்த கசப்பான நிஜத்தை ஆய்வுகள் வெளிக் கொண்டு வரத் தொடங்கிவிட்டன.


மேலும்  படிக்க | Processed Food: பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு குட்பை சொல்ல இதைவிட வேற காரணம் தேவையா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR