பெண்களின் மனதில் நீண்ட காலமாக நிலைக் கொண்டிருக்கும் கேள்வி பிரா போடலாமா, வேண்டாமா? என்ற விடைதெரியாத கேள்வி. பிரா அணிவதால் பெண்களுக்கு நிறைய ஆரோக்கிய கேடுகள் ஏற்படுகிறது. இரவில் மட்டும் பிரா அணியாமல் உறங்குவது நல்லது என பலவிதமான குழப்பங்களை நம்மை சுற்றி இருப்பவர்கள் கூறியிருப்பார்கள். இவர்கள் கூறும் ஆரோக்கிய குறிப்புகளில் நாம் பாதி பைத்தியமாக ஆகிவிடுவோம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரி! உண்மையில் பிரா அணிவது நலத்தா? கேட்டதா? வருடக்கணக்கில் இதுபற்றி ஆய்வுகள் மேற்கொண்ட நிபுணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.....! 


உண்மையில் பிரா அணிவது பெண்களுக்கு நல்லதா? கெட்டதா? என கண்டறிய போதிய அளவு ஆய்வுகள் இன்று வரையில் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. நிறைய தளங்களில் ஒருசில சிறிய ஆய்வுகளின் அறிக்கைகளை கொண்டு பிரா தீங்கானது, பிராவை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று பக்கம், பக்கமாக எழுதி நம்மை குழப்பிவிடுவார்கள்! 


இது பற்றி ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் மட்டும் 15 ஆண்டுகளாக பெண்கள் பிரா அணிவது நல்லதா, கெட்டதா என நீண்ட ஆய்வை நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் அவர் நிறைய தகவல்கள் திரட்டியுள்ளார். 


இந்த ஆய்வின் முடிவில் அவர் கூறியுள்ளது....! 


பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்க்குமாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.


பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில் ரௌலியன் கூறியுள்ளது, இந்த ஆய்வில் 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்கள் கலந்துக் கொண்டனர். 


இதனால், இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.


இதே ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட மற்றொரு குழு பெண்கள் தினமும் பிரா அணிபவர்கள், அவர்களுக்கு பிரா அணிவதனால், அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும் அவை தீய தாக்கத்திற்கு ஆளாவதை ரௌலியன் கண்டறிந்துள்ளார். இதனால், மார்பகங்கள் பிரா அணிவதால் மேலும், தொங்கும் நிலையை தான் அடையும் என்று ரௌலியன் கூறியுள்ளார்.


இதனால் பெண்கள் பிரா அணியவே கூடாதா என கேட்பட்ட கேள்விக்கு ரௌலியன் கூறிய பதில்:- பல ஆண்டுகளாக பிரா அணிந்து வருவதால் பெண்களின் மார்பகங்களுக்கு எந்தவொரு நல்ல விளைவும் ஏற்படவில்லை, ஏற்பட போவதும் இல்லை என அவர் கூறினார். மேலும், சில நிபுணர்கள் இது வெறும் மார்கெட் யுக்திகளில் பிரா அணிவது ஆரோக்கியம் என்பது போல காண்பிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.


பல பெண்கள் பிரா அணிவதற்கு காரணம் மார்பங்களை தொங்கிவிடக் கூடாது என்பதற்காக தான். மேலும், கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போது பிராக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இவை எல்லாம் பெண்களுக்கு மூளை சலவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.


உண்மையில், பிரா அணிவதால் தான் மார்பகங்கள் அதிகம் தொங்கும் நிலை கொல்கிறது என்றும். பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு என்ன காரணம் என்றால் பெண்களுக்கு வயதாவது, அதிக குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் இயற்கையாகவே பெண்களின் மார்பகம் தொங்கும் நிலைக்கு வரலாம் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.