கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இந்த படம் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 


திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்


"காலா" படத்தின் உரிமையை லைகா நிறுவனம் வங்கி உள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வர இருப்பதால், படத்தின் விநியோக உரிமையை விற்று வருகிறது லைகா நிறுவனம். அதில், மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களின் விநியோக உரிமையை பைனான்சியர் அன்பு செழியன் உரிமையாளராக இருக்கும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்த அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பு பைனான்சியர் ஜி.என். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தாலேயே, நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


கந்து வட்டி வில்லன்களிடம் இருந்து தமிழ்த் திரையுலகை மீட்க வேண்டும்


இதனையடுத்து, நடிகர் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் ஜி.என். அன்புச்செழியன் தனது குடும்பத்தினருடம் தலைமறைவாகிவிட்டார். அவரை இன்னமும் போலீசார் தேடிக் கொண்டு இருக்கும் நிலையில், "காலா" படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருப்பது சசிக்குமார் குடும்பத்தாரையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 


இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ளுமா? என திரைத்துறை வட்டாரம் எதிர்பார்க்கின்றனர்